ETV Bharat / jagte-raho

மாடு திருடியவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் - மாடு திருடியவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

விழுப்புரம்: மடப்பட்டில் மாடு திருடிய கும்பலை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

villupuram district news
cow theft gang
author img

By

Published : Nov 2, 2020, 12:08 PM IST

விழுப்புரம் அருகேயுள்ள மடப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவர் பசுமாடு வளர்த்து வருகிறார்.

இவரது மாட்டை பண்ருட்டி அருகேயுள்ள கட்டையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு (நவ.1) திருடிச் செல்லும்போது பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது, அதில் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஐயப்பன் என்பவரை மட்டும் பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து உதைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.