ETV Bharat / jagte-raho

கொலையில் முடிந்த திருமணத்தை மீறிய உறவு - சிக்கிய தம்பதி!

மனைவி இன்னொருவருடன் நெருக்கமாக இருந்ததைக் கண்ட கணவர், அவரை கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியுடன் சேர்ந்து கொலை செய்யப்பட்டவரின் உடலை பஞ்சு மெத்தையில் மறைத்து வைத்துத் தூக்கிச்சென்ற போது காவல் துறையினரிடம் இருவரும் சிக்கியுள்ளனர்.

two arrested in thiruvallur murder
two arrested in thiruvallur murder
author img

By

Published : Feb 8, 2021, 3:27 PM IST

திருவள்ளூர்: மனைவியின் காதலனைக் கொலை செய்து மறைக்க நினைத்த தம்பதியைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீஞ்சூரை அடுத்த கொக்குமேடு பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பஞ்சு மெத்தையை ஏற்றிச்சென்ற இருவர் காவலர்களைக் கண்டதும், வேகமாகக் கடந்துசெல்ல முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை பின் தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்துச் சோதனையிட்டபோது, பஞ்சு மெத்தையில் சுருட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் பிணமாக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காட்டூர் காவல் துறையினர், இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்ளிட்ட இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞரின் வீட்டில் ஏசி வெடித்து விபத்து!

அதில், அவர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திர சிங் (41) அவரது மனைவி சாயா(33) என்பதும், தனியார் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இவர்கள் ராமநாதபுரம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இளைஞர் அதே மாநிலத்தைச் சேர்ந்த தங்களுடன் பணிபுரியும் மனோஜ்(30) என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தேவேந்திர சிங்கின் மனைவியுடன் மனோஜுக்கு திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகவும், இதனையறிந்து அவரை தீர்த்துக்கட்ட ஏற்கனவே திட்டமிட்டிருந்த தேவேந்திர சிங் நேற்று வழக்கம்போல் தனது மனைவியைப் பார்க்க வந்த மனோஜைச் சுத்தியால் அடித்து கொலை செய்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவத்தை மூடி மறைக்க தனது மனைவியுடன் சேர்ந்து பஞ்சுமெத்தையில் சுருட்டி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று புதைக்கத் திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இக்கொலையில் வேறு எவருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.