ETV Bharat / jagte-raho

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த காவலர் மீது போக்சோ வழக்கு - சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி காவலர்

டெல்லி: சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

cop-arrested
cop-arrested
author img

By

Published : Oct 26, 2020, 12:29 PM IST

பெண், சிறுமி ஆகியோரை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிய போக்குவரத்துக் காவலரை துவாரகா காவல் துறை கைது செய்துள்ளது. போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட அவரின் பெயர் புனீத் கிரேவால் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர், தற்போதுபோது நீதிமன்ற காவலில் உள்ளார.

இதுகுறித்து டெல்லி காவலர் ஒருவர் கூறுகையில், "அடையாளம் தெரியாத நபர் மீது ஒரு பெண் பாலியல் வன்புணர்வு புகார்களை அளித்துள்ளார். இது குறித்து பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் போக்குவரத்து காவலர் என்பது தெரியவந்தது.

சிசிடிவி வீடியோ பதிவுகளை ஆராய்ந்து அவரை பிடித்துள்ளோம். முதற்கட்ட விசாரணையில், அவர் தொடர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஐபிசி 354 டி, 354 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.