ETV Bharat / jagte-raho

இரு தரப்பினரிடையே மோதல்... பெட்ரோல் குண்டு வீசி அச்சுறுத்தல்... - Panamadangi police investigat

வேலூர்: கீழ் முட்டுகூர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருதரப்பைச் சேர்ந்தவர் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கீழ் முட்டுகூர் பகுதியில் பரபரப்பு
author img

By

Published : Aug 31, 2019, 9:27 AM IST

வேலூர் மாவட்டம் கீழ் முட்டுகூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், வடுகந்தாங்கலில் உள்ள பள்ளிக்கு சென்று வரும்போது மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, ஒரு தரப்பை சேர்ந்த மாணவனின் சகோதரர் விசாரித்ததால், மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கீழ் முட்டுகூர் கிராமத்தை சேர்ந்த தரணி(27), லலித்குமார்(27) தரப்புக்கும் கோபி(24), விஷ்ணு(23), சக்திவேல்(20), அருண்(25) தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக பனமடங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இரு தரப்பினரிடையே தொடரும் மோதல்... பெட்ரோல் குண்டு வீசி அச்சுறுத்தல்...

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு கீழ் முட்டுக்கூர் பகுதியில் விஷ்ணு, அருண் ஆகியோரின் இருசக்கர வாகனங்களை, தரணி, லலித்குமார் தரப்பினர் தீ வைத்து எரித்தனர். இதையடுத்து, இரு தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரை பனமடங்கி காவல் துறையினர் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து விஷ்ணு, அருண் ஆகியோர் தரப்பைச் சேர்ந்த சம்பத் என்பவரின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். இதனால் வீடு தீ பற்றி எரிந்ததில் சம்பத்தின் மனைவி பாதிக்கப்பட்டு வடுகந்தாங்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பனமடங்கி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:வேலூரில் பதற்றம்

வடுகன்தாங்கல் அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை கலவரமாக மாறியது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிBody:வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் வடுங்கன்தாங்கள் பகுதியில் உள்ள பள்ளிக்கு பேருந்தில் சென்று வரும் போது பேருந்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையேயான பிரச்சனை குறித்து ஒரு தரப்பை சார்ந்த மாணவனின் அண்ணண் விசாரித்துள்ளார். பின்னர் இப்பிரச்சனை இருதரப்பினரின் பிரச்சனையாக மாறி 2 பேரும் தாக்கிக்கொண்டதில் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக பனமடங்கி காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தனர். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி இரவு சின்ன வடுங்கன்தாங்கள் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற விஷ்ணு, அருண் (ஆதிதிராவிடர்) ஒரு தரப்பினரை மற்றொரு (வன்னியர்) தரப்பினர் தடுத்து நிறுத்தி இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து எரரித்துள்ளனர். இதையடுத்து 2 தரப்பினரும் கொடுத்த புகாரையடுத்து கீழ்முட்டுகூர் கிராமத்தை சேர்ந்த தரணி, லலித்குமார், கோபி, விஷ்ணு, சக்திவேல் என 2தரப்பையும் சேர்ந்த 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையடடுத்து கீழ்மூட்டுகூர் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் முன்விரோதம் காரணமாக நேற்று நள்ளிரவு ஒருதரப்பை சேர்ந்த (ஆதிதிராவிடர்) சம்பத் என்பவரின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். (பெட்ரோல் பாட்டில்). இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதில் வீடு தீ பற்றி எரிந்ததில் சம்பத் என்பவரின் மனைவி கர்பிணி பெண் பாதிக்கப்பட்டு வடுங்கன்தாங்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல் துறை குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சபவங்களள் தொடர்பாக பனமடங்கி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.