திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் துணை ஆணையர் ரவளிபிரியா உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் ராஜேஷ்குமார் (35) என்பவர் பி.டி.நகர் இளஞ்செழியன் தெருவில் உள்ள அவரது மளிகை கடையில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்ததுள்ளது.
அதன்பேரில், திடீரென அக்கடைக்கு சென்று காவல் துறையினர் மேற்கொண்ட சாதனையில், அங்கு ஐந்து மூட்டைகளில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஜவஹர் பீட்டர் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை விற்ற ராஜேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.