கன்னியாகுமரி மாவட்ட வனத்துறைக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில், சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், மருங்கூர் அருகே வனத்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர், கால்வாய்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், கால்வாயில் சட்டவிரோதமாக மினி லாரியில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர். ஆனால் வனத்துறையினரை கண்டதும் மினி லாரி ஓட்டுநர் மற்றும் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து மணலுடன் இருந்த மினி லாரியை பறிமுதல் செய்த வனத்துறையினர், அதனை அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய ஓட்டுநரையும், மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலையும் பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.