ETV Bharat / jagte-raho

திருமண வீட்டிற்குள் புகுந்து ரகளை - ஒன்பது பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு! - மதுரை செய்திகள்

மதுரை: திருமண வீட்டிற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட 9 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

clash
clash
author img

By

Published : Oct 19, 2020, 1:21 PM IST

மதுரை மாவட்டம், சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த முருகாயி என்பவரின் மகனுக்கு நேற்று(அக்.18) திருமணம் நடைபெற்ற நிலையில், மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி அவரது வீட்டில் நடந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 இளைஞர்கள், வீட்டு வாசலில் நின்றிருந்த திருமண வீட்டார் மீது மோதினர்.

வேகமாக வாகனம் ஓட்டியதைத் தட்டிக்கேட்ட திருமண வீட்டாரை மூன்று இளைஞர்களும் ஜாதி ரீதியாக அவதூறாகப் பேசினர். அதோடு, சிறிது நேரத்தில் மேலும் 10 பேரை அழைத்து வந்து, திருமண வீட்டை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது முருகாயியைத் தலையில் கடுமையாகத் தாக்கிய அக்கும்பல் வீட்டில் இருந்த மொய்ப்பணம் 15 ஆயிரத்தையும் திருடிச் சென்றது.

திருமண வீட்டிற்குள் புகுந்து ரகளை - 9 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு!

பின்னர் இதுகுறித்து முருகாயி அளித்த புகாரின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி உட்பட 9 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இதுவரை ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி... காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தஞ்சம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.