சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பிச்சாண்டி (67). இவர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் தற்போது ஆயுதப்படை காவலராக பணியாற்றுகிறார்.
நேற்று இரவு பிச்சாண்டி வீட்டில் உள்ள படுக்கையறையில் சிகரெட் பிடித்துள்ளார். சிகரெட்டை சரியாக அணைக்காதது தெரியாமல் படுக்கையில் போட்டதால், திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அப்போது தீயை அணைக்க பிச்சாண்டி முயன்ற போது, அவரது ஆடையில் தீ பரவியது. இதனால் அலறிய அவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.
அதற்குள் அவரது உடலில் தீ பற்றத் தொடங்கியது. பின்னர் தீயை அணைத்து படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக ஆயிரம் விளக்கு காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க; 'தீ'யால் பரவிய ஹெலிகாப்டர் வதந்தி; நடவடிக்கை நிச்சயம் என ஆட்சியர் உறுதி