வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியைச் சார்ந்தவர் சௌந்தர். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான அனிஷா என்ற ஐந்து வயது சிறுமி, திருப்பத்தூர் மேரி இம்மாகுலேட் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்றுவந்தார்.
கடந்த 25ஆம் தேதி முதல் மர்ம காய்ச்சலால் அனிஷா அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்லப்பட்ட அனிஷாவுக்கு ஊசி மட்டும் போடப்பட்டது.
அதன் பின்னர் நேற்றிரவு திடீரென காய்ச்சல் அதிகமாக மீண்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை பெற்றோர் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த திருப்பத்தூர் அரசு மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அல்லது வேலூர் அடுக்கம்பாறை செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பெற்றோருடன் சென்ற அனுஷா காலை 11 மணியளவில் உயிரிழந்தார். இச்சம்பவம் ஊர் பொதுமக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கெட்ட வார்த்தை பேசியதைத் தட்டிக்கேட்ட திமுக பிரதிநிதி உள்பட 4 பேரை வெட்டிய கஞ்சா கும்பல்!