சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர் தனது சகோதரி ஜகதிஷ்வரிக்கு உறவுமுறை சான்றிதழ் பெற பெறுவதற்காக தனது சகோதரியுடன் அபிராமபுரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது வட்டாட்சியர் சுப்பிரமணியன் உறவுமுறை சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் ரூ.25,000 லஞ்சமாக தர வேண்டும் என்று ரவிசந்திரனிடம் கேட்டுள்ளார். ஆனால் ரவிசந்திரன் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் உள்ளது என தாசில்தாரிடம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை பெற்ற தாசில்தார் அதை தூக்கி வீசியதோடு, மேலும் 10 ஆயிரம் ரூபாய் தந்தால் மட்டுமே கையெழுத்து போடுவேன் என்றும் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ரவிசந்திரன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்த அறிவுரையின்படி ரவிசந்திரன் இன்று மதியம் மீண்டும் தாசில்தார் அலுவலகத்திற்கு ரசாயன தடவிய 10 ஆயிரம் ரூபாயை கொண்டுச் சென்றுள்ளார். மேலும் ரவிசந்திரன் உடன் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பொதுமக்கள் போன்று சென்றுள்ளனர்.
இதனையடுத்து ரவிசந்திரன் அளித்த பணத்தை தாசில்தார் வாங்கிய சமயத்தில் அவரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைதுசெய்தனர். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாசில்தாரிடன் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க...கோயிலை அகற்றியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !