ETV Bharat / jagte-raho

ஓய்வூதியப் பணம் மோசடி - முதியோர்கள் புகார் - காவல் ஆணையர் அலுவலகம்

சென்னை: டி.எச்.எப்.எல் நிறுவனம் மோசடி செய்த ஓய்வூதியத் தொகையை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்ட முதியோர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

pension
pension
author img

By

Published : Dec 20, 2019, 2:26 PM IST

இந்தியா முழுவதும் கடந்த 32 ஆண்டுகளாக இயங்கிவரும் நிறுவனம் டி.எச்.எப்.எல் எனப்படும் தீவான் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம். இதில் முதியோர்கள் பலர் தங்களது ஓய்வூதியப் பணத்தைச் செலுத்தி வந்துள்ளனர். அந்தப் பணத்தை வட்டியுடன் சேர்த்து ஆண்டு இறுதியில் டி.எச்.எப்.எல் நிறுவனம் கொடுத்து வந்துள்ளது. இந்நிலையில் டி.எச்.எப்.எல் நிறுவனம் போலியாக பல நிறுவனங்களை வைத்து சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக செய்தி வெளியானது.

மேலும், சில முதியோர்களின் தொகை அக்டோபர் மாதம் முதிர்வு அடைந்ததால் பணத்தை டி.எச்.எப்.எல் நிறுவனத்திற்குச் சென்று கேட்டுள்ளனர். ஆனால், டி.எச்.எப்.எல் நிறுவனம் 3 மாதங்களாக பணத்தைத் தராமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவசர காலம் மற்றும் மருத்துவ செலவுக்காகச் செலுத்திய பணத்தையும் இந்நிறுவனம் ஏமாற்றியுள்ளதாக முதியோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்த பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் செலுத்திய பணத்தை மீட்டுதரக் கோரியும் மனு அளித்தனர்.

ஓய்வூதியப் பணம் மோசடி - முதியோர் புகார்

இதையும் படிங்க: போலி கையெழுத்திட்டு வேட்பு மனுவை வாபஸ் வாங்கிய அடையாளம் தெரியாத நபரால் பரபரப்பு!

Intro:Body:டிஎச்எப்எல் நிறுவனம் மோசடி செய்த ஓய்வூதிய தொகையை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்ட முதியோர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

இந்தியா முழுவதும் கடந்த 32வருடங்களாக இயங்கி வரும் நிறுவனம் டிஎச்எப்எல் எனப்படும் தீவான் ஹோம் பைனான்ஸ் நிறுவனம்.இதில் ஓய்வு பெற்ற முதியோர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை இந்த நிறுவனத்தில் செலுத்தி அந்த பணத்தை வட்டியுடன் சேர்த்து வருட இறுதியில் கொடுத்து வந்துள்ளனர்.இதனை நம்பி சென்னையில் ஓய்வுப்பெற்ற முதியோர்கள் பலர் ஓய்வூதியத்தை திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் செலுத்தியுள்ளனர்.இந்த நிலையில் டிஎச்எப்எல் நிறுவனம் போலியாக பல நிறுவனங்களை வைத்து சுமார் 31ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக செய்தி வந்தது.

மேலும் பணத்தை செலுத்திய சில முதியோர்களின் தொகை அக்டோபர் மாதம் முதிர்வு அடைந்ததால் பணத்தை செலுத்திய நபர்கள் டிஎச்எப்எல் நிறுவனத்திற்கு சென்று கேட்டுள்ளனர்.ஆனால் டிஎச்எப்எல் ஊழியர்கள் 3மாதங்களாக பணத்தை தந்துவிடுவதாக கூறி ஏமாற்றி வருகின்றனர்.மேலும் அவசர காலத்தில் மற்றும் மருத்துவ செலவுக்காக செலுத்திய பணத்தை ஏமாற்றியுள்ளதாகவும்,ஓய்வூதியம் பெற்ற பல முதியோர்கள் தங்களது தொகையை செலுத்தியுள்ளதாகவும் கூறினார்.

இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தாங்கள் செலுத்திய பணத்தை மீட்டுதரக்கோரியும் பாதிக்கப்பட்ட முதியோர்கள் மனு அளிக்க வந்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.