ETV Bharat / jagte-raho

ஓடும் தொடர்வண்டியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

சென்னை: ஓடும் தொடர்வண்டியில் பெண் பயணச்சீட்டு பரிசோதகரிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

railway
railway
author img

By

Published : Dec 19, 2019, 3:44 PM IST

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகராகப் பணிபுரிந்துவருபவர் ரெஜினி. இவர் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம்வரை செல்லக்கூடிய தொடர்வண்டியில், பொதுமக்களிடம் பயணச்சீட்டு பரிசோதனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென ரெஜினியின் கழுத்திலிருந்த நான்கு சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு, ஓடும் தொடர்வண்டியிலிருந்து குதித்துத் தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிகழ்வு தொடர்பாக மாம்பலம் தொடர்வண்டி காவல் துறையிடம் ரெஜினி புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அந்த அடையாளம் தெரியாத நபரைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 'மோசடி செய்த ரூ. 9 கோடியை மக்களுக்குத் திருப்பி அளிக்கத் தயார்' - மனம் திருந்திய ஜுவல்லரி அதிபர்

Intro:Body:ஓடும் ரயிலில் பெண் டிக்கெட் பரிசோதகரிடம் இருந்து 4சவரன் செயின் பறிப்பு.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பனிப்புரிந்து வருபவர் ரெஜினி.இவர் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை செல்லக்கூடிய ரயிலானது கோடம்பாக்கத்தில் செல்லும் போது ரயிலில் ஏறி பொதுமக்களிடம் டிக்கெட் பரிசோதனை செய்து வந்துள்ளார். பின்னர் திடீரென பயணி ஒருவர் ரெஜினியின் கழுத்தில் இருந்த 4சவரன் செயினை பறித்து கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ரெஜினி மாம்பலம் ரயில்வே போலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.