ETV Bharat / jagte-raho

சிவராத்திரி வழிபாடு - பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு! - சிவராத்திரி

சென்னை: சிவராத்திரியை முன்னிட்டு கோயிலுக்கு வழிபட வந்த 3 பெண்களிடம் 12 சவரன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

snatching
snatching
author img

By

Published : Feb 22, 2020, 1:56 PM IST

தமிழ்நாடு முழுவதும் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சைதாப்பேட்டையிலுள்ள காரணீஸ்வரர் கோயிலிலும் சிவராத்திரி சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இதற்காகப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.

இந்நிலையில், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததைப் பயன்படுத்தி சைதாப்பேட்டையைச் சேர்ந்த சரஸ்வதி (65), சாந்தி (65 ) ஆகிய இருவரிடம் நான்கு சவரன் நகைகளையும், பல்லாவரத்தைச் சேர்ந்த அபிராமி (25) என்பவரிடமிருந்து 8 சவரன் நகைகளையும் அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு-செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: குண்டர் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.