சென்னையில் குற்றச் செயல்கள் அதிகமாக நடக்கும் இடங்களில் , காவல்துறையினர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இதேபோல், கடந்த ஜூன் மாதம் புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 22 ஆவது தெருவிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்நிலையில், அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமரா திருடு போயிருப்பது அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பான புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள மற்றோரு சிசிடிவியில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 4 மணியளவில் சட்டை அணியாத ஒரு நபர், சிசிடிவி கேமராவை கல்லால் அடித்து கீழே விழவைத்து, பின்னர் அதனை திருடிச்செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதனை வைத்து கேமராவை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருட்டு போன்றவற்றை தடுக்க பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவே திருடுபோன நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பத்து கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது!