ETV Bharat / jagte-raho

கடத்தப்பட்ட 8 வயது சிறுமி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு! - கடத்தப்பட்ட 8 வயது சிறுமி கொலை

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கடத்தப்பட்ட எட்டு வயது சிறுமியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Burnt body of kidnapped girl found
Burnt body of kidnapped girl found
author img

By

Published : Jun 27, 2020, 8:27 AM IST

Updated : Jun 29, 2020, 5:51 AM IST

இமாச்சலப் பிரதேச மாநிலம் அமிர்புர் பகுதியில் கடத்தப்பட்ட எட்டு வயது சிறுமியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து காவல் துறையினருக்கு இன்று (ஜூன் 27) தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இது குறித்த அவர்களின் விசாரணையில், அச்சிறுமியை லாரி ஓட்டுநர் ஒருவர் எரித்துக் கொன்றிருக்கலாம் என்று தெரிகிறது.

சம்பவ இடத்திற்கு தடயவியல் வல்லுநர்கள், மோப்பநாய்கள் அழைத்துவரப்பட்டு கொலையாளியைக் கண்டுபிடிக்கும் செயல் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுத்த காதலியை உயிருடன் எரித்தவர் கைது!

Last Updated : Jun 29, 2020, 5:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.