ETV Bharat / jagte-raho

கார்பெண்டர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் கொள்ளை

சென்னை: புரசைவாக்கம் அருகே கார்பெண்டர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10-lakh-robbery
10-lakh-robbery
author img

By

Published : Nov 6, 2020, 10:35 PM IST

சென்னை புரசைவாக்கம் சுந்தரம் தெருவில் வசித்து வருபவர் கைலாஷ் சந்திரா(45). இவர், கார்பெண்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கைலாஷ் தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று (நவம்பர் 5) சென்றார். அப்போது, வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், பீரோவில் இருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதனிடையே, வீடு திரும்பிய கைலாஷ் வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் கைலாஷ் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.