ETV Bharat / jagte-raho

உரிய பணம் கொடுக்காமல் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடும் பாஜகவினர் - வெளியானது சிசிடிவி காட்சி! - பாஜக மாவட்ட துணை தலைவர் குணசேகரன்

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பாஜகவினர் புகுந்து உரிய பணம் கொடுக்காமல், அங்குள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு சென்ற சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பாஜக-வினர்  சூறையாடும் சிசிடிவி காட்சி
பாஜக-வினர் சூறையாடும் சிசிடிவி காட்சி
author img

By

Published : Oct 11, 2020, 6:16 PM IST

சென்னை: ஆயிரம் விளக்குப் பகுதியில் பாஜகவினரால் சூப்பர் மார்க்கெட் சூறையாடப்பட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலைப் பகுதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் சில தினங்களுக்கு முன்பு, பாஜகவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கடைக்குள் நுழைந்து பொருட்களுக்கு உரிய பணம் கொடுக்காமல் எடுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது.

உரிய பணம் கொடுக்காமல் பாஜகவினர் பொருட்களை எடுத்துச் செல்லும் காட்சி

இதுகுறித்து ஆயிரம் விளக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன் உட்பட 20 பேரைக் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தற்போது அந்த கடைக்குள் பாஜக பிரமுகர்கள் உள்ளே நுழைந்து பொருட்களை சூறையாடும் சிசிடிவி காட்சிகள் அடங்கியபதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பல்பொருள் அங்காடியில் பாஜகவினர் சூறையாட்டம்!

இதில் கடைக்குள் அதிக எண்ணிக்கையில் நுழைந்த பாஜகவினர் பொருட்கள் ஒவ்வொன்றையும் எடுத்து தாங்கள் கொண்டு வந்த பைகளில் போட்டுக்கொண்டு, அதற்கு உரிய பணம் கொடுக்காமல் வெளியே எடுத்துச் செல்லும் காட்சிகளும் அங்கு பணிபுரியும் ஊழியர்களை மிரட்டும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.