ETV Bharat / jagte-raho

ஏற்காட்டில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை: குற்றவாளிக்கு போலீஸ் வலை...!

சேலம்: ஏற்காட்டில் நிலத்தகராறு தொடர்பாக பாஜக ஒன்றிய துணைத் தலைவர் சின்ராஜ் என்பவர், உறவினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

yercaud murder
author img

By

Published : Sep 15, 2019, 11:38 PM IST

சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம், நாகலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கொளகூர் கிராமத்தைச் சேர்ந்த அலவராக்கவுண்டர் - கரியம்மாள். இவரது மகன் சின்ராஜ். இவர், பாஜகவின் ஏற்காடு ஒன்றிய துணைத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார்.

கரியம்மாளின் நிலத்தை அவரது மருமகனான ராமகிருஷ்ணன் என்பவர் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால், தங்கள் நிலத்தை ராமகிருஷ்ணனிடம் இருந்து மீட்டு தரும்படி கரியம்மாளின் மகன்கள் ஊர் பெரியவர்களிடம் கூறினர்.

ஆகையால், கொளகூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் திடலில் ஊர் பஞ்சாயத்து கூடி, கரியம்மாளுக்குச் சொந்தமான நிலத்தை அவர்களது வாரிசுகளிடம் ஒப்படைக்கும்படி ராமகிருஷ்ணணிடம் கூறியுள்ளனர். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.

பின்னர், நண்பகலில் கொளகூரில் உள்ள டீக்கடை ஒன்றில் அமர்ந்திருந்த சின்ராஜை, ராமகிருஷ்ணனின் மகன் மணிகண்டன் அரிவாளால் வெட்டினார். இதில் சின்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் சென்ற ஏற்காடு போலீசார், வழக்குப் பதிவு செய்து கொலையாளியைத் தேடி வருகின்றனர்.

Intro:ஏற்காட்டில் பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை Body:

சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுக்கா, நாகலூர் பஞ்சாயத்திற்குட்பட்ட கொளகூர் கிராமத்தை சேர்ந்தவர் அலவராக்கவுண்டர் மகன் சின்ராஜ்.

விவசாயத்தொழில் செய்து வந்தார். மேலும் பா.ஜ.க. வின் ஏற்காடு ஒன்றிய துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

இவரது சித்தப்பா சென்றாயக்கவுண்டர் இறந்த பின்னர் அவரது நிலத்தை சென்றாயக்கவுண்டரின் இரு சகோதரிகள் மற்றும் சகோததரர் அலவராக்கவுண்டர் ஆகியோருக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

அலவராக்கவுண்டர் இறந்த பின்னர் அவரது நில பாகம் சின்ராஜின் தாயார் கரியம்மாள் பெயருக்கு மாறுதல் ஆகியுள்ளது.

இருந்தபோதிலும், கரியம்மாள் நிலத்தை சென்றாயக்கவுண்டரின் சகோதரி வெள்ளயைம்மாளின் மகன் ராமகிருஷ்ணன் பயன்படுத்தி வந்துள்ளார்.

கரியம்மாளின் மகன்கள் தங்கள் நிலத்தை ராமகிருஷ்ணணிடம் இருந்து மீட்டு தரும்படி ஊர் பெரியவர்களிடம் கூற, இன்று காலை கொளகூர் கிராம, பிள்ளையார் கோவில் திடலில் ஊர்பஞ்சாயத்து கூடி, கரியம்மாளுக்கு சொந்தமான நிலத்தை, அவர்களது வாரிசுகளிடம் ஒப்படைக்கும்படி, ராமகிருஷ்ணணிடம் கூறியுள்ளனர். அதற்கு ராமகிருஷ்ணனும் ஒப்புக்கொண்டார்.

பின்னர் இன்று மதியம் கொளகூரில் உள்ள சரவணன் டீ கடையில் அமர்ந்திருந்த சின்ராஜை, ராமகிருஷ்ணின் மகன் மணிகண்டன், என்பவர் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் சின்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். கொலையாளி மணிகண்டன் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டார்.

ஏற்காடு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Conclusion:
உயிரிழந்த சின்ராஜூக்கு , மனைவி லட்சுமி, ஜெயப்பிரியா என்ற மகளும், சேதுபதி என்ற மகனும் உள்ளனர். இந்த படுகொலை சம்பவம் ஏற்காடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.