மத்தியப் பிரதே மாநிலம் போபாலில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது மனைவியை அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கூடுதல் இணை இயக்குநரான புருசோத்தம் சர்மா, தனது மனைவியை அடித்து துன்புறுத்தும் அந்த வீடியோவில், உடனிருந்த அலுவலர்கள் அவரை தடுக்கமுற்படுவது பதிவாகியுள்ளது.
புருசோத்தம் சர்மா திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததால் அவர்களுக்குள் நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. புருசோத்தம் சர்மாவின் மகன், இச்சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் தனது தந்தையின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்துள்ளார். இருப்பினும், இதுதொடர்பாக இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
"நான் தவறானவன் என்றால் என் மனைவி என் மீது முன்னரே புகார் அளித்திருக்கலாம். இது ஒரு குடும்பப் பிரச்னை. நான் ஒரு குற்றவாளியோ அல்லது வன்முறையாளனோ அல்ல. இது கடந்து செல்லவேண்டிய விரும்பத்தகாத நிகழ்வு. 32 ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு திருமணம் நடந்தது.
கடந்த 2008ஆம் ஆண்டு அவர் என் மீது புகார் அளித்தார். புகார் அளித்தபின்பும் அவர் எனது வீட்டிலேயே இருந்தார். என்னுடைய பணத்தில் அனைத்து வசதிகளையும் அனுபவித்தார்" என்று புருசோத்தம் சர்மா சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க: கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து வாட்ஸ்அப்பில் பரப்பிய சிறுவர்கள் கைது!