மும்பை: கரோனா காலத்தினால் மக்கள் பெருவாரியாக இணைய வழி பணப் பரிமாற்றத்தையே பெரிதும் விரும்புகின்றனர். ரீசாஜ் செய்வது முதல் இணைய அங்காடிகளில் காய்கறி வாங்குவது வரை அனைத்திற்குமான தொகையை இணையம் மூலம் பகிருகின்றனர்.
அது ஹேக்கர்களுக்கு வசதியாக மாறியிருப்பதாக மகாராஷ்டிரா சைபர் பாதுகாப்புத் துறை கண்டறிந்துள்ளது. ‘ஜோக்கர்’ எனும் மால்வேரை கணினி / கைபேசியில் உட்புகுத்தி வங்கி பண பரிமாற்றத்ததை கண்காணித்து, பணத் திருட்டில் ஈடுப்பட்டு வருவது அம்பலமாகியுள்ளதாக அதன் துறைத் தலைவர் யஷஸ்வி யாதவ் தெரிவிக்கிறார்.
கரோனா ஊரடங்கில் லட்ச கணக்கில் பிரியாணிகளை தின்று முழுங்கிய இந்தியர்கள்!
சில இணைப்புகளை சொடுக்குவதனால் நம் தகவல் சாதனங்களில் குடிகொள்ளும் இந்த ‘ஜோக்கர்’ மால்வேர், பயனாளர்களுக்கு ‘ஓடிபி’ அனுப்பி அதன்மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர். மேலும், இது தொடர்பாக 11 செயலிகளை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியிருப்பதாக மகாராஷ்டிரா சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.