ETV Bharat / jagte-raho

அருள்தந்தை ஸ்டேன் கைது: அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி: அருள்தந்தை ஸ்டேன் கைதைக் கண்டித்து திருநெல்வேலியில் அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அருட்தந்தை ஸ்டேன் கைது
அருட்தந்தை ஸ்டேன் கைது
author img

By

Published : Oct 31, 2020, 9:24 PM IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அருள்தந்தை ஸ்டேன் சுவாமி கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றன.

இந்நிலையில் ஸ்டேன் சுவாமியின் கைதை கண்டித்தும் திருநெல்வேலி மாவட்டம் உடையார்பட்டியில் சமீபத்தில் கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சொந்தமான கல்லறை தோட்டத்திற்குள் புகுந்து கல்லறைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தை கண்டித்தும் இன்று அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி, மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மேலும் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். ஸ்டேன் சுவாமியை விடுதலை செய்யக்கோரி கையில் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு பாலபிரஜாபதி அடிகளார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்துவந்த ஸ்டேன் சுவாமி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதை விட அநியாயம் வேறு ஒன்றும் இல்லை, திருநெல்வேலி உடையார்பட்டியில் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்று யார் நடந்துகொள்வார்கள்? இதை ஆதரிக்கலாமா? இந்த அரசு ஒரு தரப்பைச் சார்ந்து செயல்படுகிறது. எனவே அனைத்து மதத்தினருக்கும் அனைத்து சமூகத்தினருக்கும் சார்ந்த அரசாக மத்திய அரசு செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் தனியார் பள்ளிகளில் கட்டண குறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.