ETV Bharat / jagte-raho

அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை - உறவினர்கள் சாலை மறியல்!

மதுரை: வரிச்சியூர் அருகே அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

madurai
madurai
author img

By

Published : Oct 12, 2020, 11:52 AM IST

மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகேயுள்ள குன்னத்தூர் கிராமத்தில் அதிமுகவைச் சேர்ந்த கிருஷ்ணன் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார்.

கிருஷ்ணனும், அவரது உறவினர் முனுசாமியும் நேற்றிரவு (அக்.11) அப்பகுதியிலுள்ள மலையடிவாரத்தில் சென்றவர்கள் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மலையடிவாரத்திற்கு சென்றபோது, கிருஷ்ணனும், முனுசாமியும் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இருவரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருப்பாயூரணி காவல்துறையினர் இருவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் கொலை செய்த கும்பலை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதி களேபரம் போல் காட்சியளிக்கிறது.

இதையும் படிங்க: தலைகீழ் மாற்றம் எப்படி? குஷ்புக்கு குட்லக் சொல்லி கேள்வி எழுப்பிய கார்த்தி சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.