திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழ குத்தப்பாஞ்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(21). இவர் ரெட்டியார்பட்டியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன், மைத்துனர் ஆகியோர் ரெட்டியார்பட்டிக்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றி ஆலங்குளம் நோக்கி வந்தபோது, கடையநல்லூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அரசுப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே முருகேசன் உயிரிழந்தார்.
அதன்பின், முருகேசனினின் உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.