ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் இளநிலை உதவி பணியாளராக சேர ராஜேஷ் என்பவர் போலி நியமன ஆணை வழங்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி அளித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ராமநாதபுரம் கல்வித் துறையில் முதன்மைக் கல்வி கண்காணிப்பாளர் கண்ணன், 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு கலைவாணன், ராஜேஷ், சதீஸ்குமார், மனோஜ் ஆகிய நான்கு பேருக்கு டிஎன்பிஎஸ்சி இளநிலை உதவி பணியிடத்திற்கான நான்கு ஆணைகளில் பெயர் திருத்தம் செய்தது தெரியவந்தது.
அதனடிப்படையில், முறைகேடாக பணி நியமன ஆணை பெற்ற ஐந்து பேரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். தலைமறைவாக உள்ள மனோஜ் என்பவரை தேடிவருகின்றனர்.
முறைகேட்டில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட ராமநாதபுரம் கல்வித் துறை முதன்மைக் கல்வி கண்காணிப்பாளர் கண்ணனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி இடைக்கால பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் நியமன ஆணையில் முறைகேடு செய்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கரோனா