திருவண்ணாமலை: 3950 லிட்டர் கள்ளச் சாராய ஊறலை அழித்து, 810 லிட்டர் கள்ளச் சாராயம் கடத்திய 5 பேரை மதுஒழிப்பு காவல் துறையினர் கைதுசெய்தனர்.
தண்டராம்பட்டு தாலுக்கா தட்டரணை பகுதியில் மதுவிலக்கு தேடுதல் வேட்டை நடத்தியதில், 1650 லிட்டர் சாராய ஊறல், வேப்பூர் செக்கடி பகுதியில் 2000 லிட்டர் சாராய ஊறல், திருவண்ணாமலை தாலுக்கா அக்கரப்பட்டி பகுதியில் 300 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
![810 litres illicit liquor seized](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-03-quarters-seized-vis-7203277_23052020173747_2305f_1590235667_421.png)
மேலும், செய்யாறு தாலுக்கா வெங்கடராயன்பேட்டை பகுதியில் 180மில்லி கொள்ளளவு கொண்ட 26 மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த நாகராஜ், என்பவரையும், தண்டராம்பட்டு தாலுக்கா வேப்பூர்செக்கடி பகுதியில் 670 லிட்டர் கள்ளச் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த கோவிந்தராஜ், என்பவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்,
ஜமுனாமரத்தூர் தாலுக்கா வீரப்பணுர் பகுதியில் 10 லிட்டர் கள்ளச் சாராயம் வைத்திருந்த சசிகுமார், குடிகந்துர் பகுதியில் 110 லிட்டர் வைத்திருந்த முருகன், திருவண்ணாமலை நகரம் கல்நகர் பகுதியில் 20லிட்டர் வைத்திருந்த நீலா, ஆகியோரையும் காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
![810 litres illicit liquor seized](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-03-quarters-seized-vis-7203277_23052020173747_2305f_1590235667_1010.png)