அரசுப் பேருந்தில் கடத்திவரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது! - தமிழ் குற்ற செய்திகள்
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சாவடியில் ஆரம்பாக்கம் காவல்துறையினர் இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாடு நோக்கி வந்த 103-N வழித்தட பேருந்தை சோதனை செய்தனர்.
இச்சோதனையில், ஆந்திரமாநிலம் நெல்லூரில் இருந்து சட்டவிரோதமாக 8 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், பேருந்தில் சந்தேகத்திற்கிடமாக பயணம் செய்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (32), சென்னை ஆவடியை சேர்ந்த ரமேஷ் (46), சென்னை விநாயகபுரத்தைச் சேர்ந்த செல்வதாஸ் (31) ஆகிய மூவரையும் கைது செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 4 வயது சிறுமியை சரமாரியாக தாக்கிய வளர்ப்பு பெற்றோர்!