திருச்சி: திருச்சி முதலியார் சத்திரம், நாகம்மாள் கோயில் அருகே பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சுற்றித் திரிவாதாக பாலக்கரை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அந்த நபர்களை காவல் துறையினர் கண்காணித்தனர். யாரையோ கொலை செய்யும் திட்டத்துடன் அக்கும்பல் திரிவது தெரிய வந்ததும், அவர்களைச் சுற்றி வளைத்த காவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முதலியார் சத்திரம் ஆசாரி தெருவைச் சேர்ந்த ராஜ்கமலின் (21) தந்தை சங்கர் என்பவர், ரவுடி சந்துரு கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளார். அதனால் சந்துருவின் நண்பர்கள், சங்கரை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளனர்.
சந்துருவின் நண்பர்களான, பிரின்ஸ், முருகானந்தம் ஆகியோர் தனது தந்தை சங்கரை கொலைசெய்ய முடிவு செய்திருப்பதை அறிந்த ராஜ்கமல், மதுரையைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன், அஜய், பாலக்கரையைச் சேர்ந்த ஜோ பிரசாத், பொன்மலையைச் சேர்ந்த ஆனந்த் குமார் உள்ளிட்ட 6 பேர் மூலம் பிரின்ஸ், முருகானந்தத்தைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
அந்த 6 பேரையும், கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து பட்டாக் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க : ’பொன்னாருக்கு எல்லாம் பதில் கூற முடியாது’ - அமைச்சர் ஜெயக்குமார்