திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பம்பட்டு, கந்தன்கொள்ள உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் டிஎஸ்பி துரை பாண்டியன் தலைமையிலான எட்டு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
செவ்வாப்பேட்டை ஆய்வாளர் பத்ம ஸ்ரீமனவாள நகர் ஆய்வாளர் கண்ணையா மற்றும் குற்றப்பிரிவு காவல் துறை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், வேப்பம்பட்டு சோதனைச்சாவடி அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் பட்டதாரி இளைஞரை தனிப்படை காவலர்கள் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த நபர் சென்னை மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் பாண்டியன் என்ற மாயகிருஷ்ணன்(29) என்பதும், அவர் மீது பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடமிருந்து 53 சவரன் தங்க நகைகள், ஒரு பல்சர் பைக் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை தனிப்படை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ஆயுர்வேதம் மற்றும் யோகா நெறிமுறையைப் பாராட்டிய மோடி!