புதுச்சேரி உருளையன்பேட்டை அய்யனார் நகரைச் சேர்ந்தவர் அருள்சாமி. இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இவரை நேற்று முன்தினம் 5 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்துவிட்டு தப்பியது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் அருள்சாமியை கொலைசெய்த குற்றவாளிகளான பூமியின்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெருமாள், அவரது கூட்டாளிகள் பிரகாஷ், வினோத் , டேவிட், தாஸ் ஆகியோர் என தெரியவந்தது. மேலும், அங்கு அவர்கள்பதுங்கியிருந்த நிலையில் நேற்று அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
![Electrician murder case](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05:49_tn-pud-06-murder-accuist-arrest-7205842_05062020174730_0506f_02461_19.jpg)
இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட அருள்சாமியிடம் பெருமாள் முப்பதாயிரம் ரூபாய் பணம் வாங்கியதாகவும், அந்த பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாரு பெருமாளிடம் வீடு தேடி சென்று அருள்சாமி கேட்டதால் ஆத்திரமடைந்த பெருமாள் தனது கூட்டாளிகள் நான்கு பேருடன் இணைந்து அவரை கத்தியால் வெட்டி கொலை செய்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் கரோனா சோதனைக்குப் பின் சிறையில் அடைத்தனர்.