கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அண்ணாநகரில் கார்த்திகேயன் (56) என்பவர் வசித்துவருகிறார். மின்வாரிய ஊழியரான இவர், சொந்த வேலை காரணமாக சென்னை சென்றுள்ளார்.
இதனையறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று 45 சவரன் தங்க நகைகள், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
பின்னர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அருகில் இருந்தவர்கள், உடனடியாகத் திருக்கோவிலூர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் திருவிழாக்களின்போது பெண்களிடம் நகைத் திருடிய இளம்பெண் கைது