ETV Bharat / jagte-raho

இளைஞர் கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது! - மதுரை செய்திகள்

சோழவந்தான், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

4 accused_Kundas
4 accused_Kundas
author img

By

Published : Nov 10, 2020, 10:15 AM IST

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசனின் மகன் பாண்டித்துரை (32). இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி 7 பேர் கொண்ட கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை குறித்து, காடுபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, 7 பேரைப் பிடித்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, சிறையில் அடைத்தனர்.

இந்த ஏழுபேரில், 4 பேர் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதன்படி, முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டி (23), முனீஸ்வரன் (25), சோழவந்தானைச் சேர்ந்த சந்தானபாரதி (21), கோழிக்கடை அஜித் குமார் (21) ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதன்படி, சோழவந்தான் காவல் ஆய்வாளர் வசந்தி, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வாண்டையார் ஆகியோர், நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: அம்மா உணவகம் எதிரே 120 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.