ETV Bharat / jagte-raho

ஐஐடி கரக்பூர் ஆராய்ச்சி மாணவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு! - B R Ambedkar Hall

புகழ்பெற்ற ஐஐடி கரக்பூரில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவானிபட்லா கோண்டல் ராவ் என்ற 31 வயதுடைய ஆராய்ச்சி மாணவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஐஐடி காரக்பூர் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை
ஐஐடி காரக்பூர் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை
author img

By

Published : Apr 29, 2020, 10:14 AM IST

Updated : Apr 29, 2020, 10:20 AM IST

கொல்கத்தா: ஐஐடி கரக்பூரைச் சேர்ந்த 31 வயது ஆராய்ச்சி மாணவரின் சடலம், அவரது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானிபட்லா கோண்டல் ராவின் உடல் நேற்று காலை 10 மணியளவில் பி.ஆர். அம்பேத்கர் மண்டபத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அவரது அறையில் கண்டெடுக்கப்பட்டது.

அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை என அவரது பெற்றோர், விடுதியில் தங்கியுள்ள பிற மாணவர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து ராவின் அறை, உள்புறமாகப் தாழிடப்பட்டிருப்பதை அவர்கள் அறிந்ததையடுத்து திறக்கக் கூறியுள்ளனர். எந்த அரவமும் இல்லாததால் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் காவல் துறையினர் விடுதிக்கு விரைந்துசென்று கதவைத் திறந்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த ராவ், இயந்திர பொறியியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்தவர்.

அவர் பிப்ரவரி மாதம் தனது சொந்த ஊரில் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொண்டார். மேலும், இரண்டு வாரங்கள் தனது குடும்பத்தினருடன் அங்கேயே தங்கியிருந்தபின், ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு பல்கலைக்கழகத்திற்குத் திரும்பியதாகக் கல்லூரி நிர்வாகம் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளது.

ராவ் ஒரு பிரகாசமான இளம் அறிஞர் என்று வர்ணித்த ஐஐடி கரக்பூர் இயக்குநர் வி.கே. திவாரி, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ராவ் தற்கொலையில் சந்தேகம் இருப்பதால், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.

Last Updated : Apr 29, 2020, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.