சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் ஈடுபட்ட மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் ஈடுபட்ட, மேலும் 26 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்தனர். ஏற்கனவே ஒரு வாரம் முன்பாக 20 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, விஏஓ தேர்வு, குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்துள்ளதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த முறைகேட்டில் தொடர்புடைய 51 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்தனர்.
மொத்தமாக மூன்று தேர்வுகளிலும், மோசடியில் ஈடுபட்ட 97 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது எண்ணிக்கை 100ஐ நெருங்கிவரும் நிலையில், மேலும் 40 பேரை தேடி வருவதாக சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.