ETV Bharat / jagte-raho

20 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலணி உதிரிபாகங்கள் கொள்ளை! - Tirupattur district latest news

தொழிற்சாலையின் கண்ணாடி கதவுகளை உடைத்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலணி உதிரிபாகங்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

shoes spare parts robbery
shoes spare parts robbery
author img

By

Published : Dec 14, 2020, 9:23 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே காலணி உதிரிபாகங்கள் விநியோகிக்கும் தொழிற்சாலையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இத்தொழிற்சாலையில் நேற்று(டிச.13) இரவு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் தொழிற்சாலையின் முன்பக்க கண்ணாடி கதவினை உடைத்து உள்ளே நுழைந்து, தொழிற்சாலையில் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் மதிப்பிலான காலணி உதிரிபாகங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

காலணி உதிரிபாகங்கள் கொள்ளை

இந்நிலையில் இன்று மதியம் தொழிற்சாலைக்கு வந்த பணியாளர்கள் தொழிற்சாலையின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலணி உதிரிபாகங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தொழிற்சாலை பணியாளர்கள் உடனடியாக உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கொள்ளை நடந்த தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். இக்கொள்ளைச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொழிற்சாலை ஊழியர்களிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பம் பகுதியில் ரபீக் அகமது என்பவருக்கு சொந்தமாக இயங்கி வருகிறது. தனியார் (கே.ஏ.எப்) காலணி உதிரி பாகங்கள் விநியோகிக்கும் தொழிற்சாலை. இத்தொழிற்சாலை காலணி தயாரிக்கும் பணிகளை சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தி, சுற்றியுள்ள காலணி தொழிற்சாலைகளுக்கு காலணி உதிரிபாகங்களை விநியோகிக்கும் அலுவலகமாக தற்போது செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பசியில்லாமல் உடல் எடையை குறைங்க... ரிவர்ஸ் டயட்டிங் முறை கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.