ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலைச்செல்வன் மற்றும் குணசேகரன். இவர்கள் இருவர் மீதும் 2 கொலை வழக்குகள் உட்பட கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு கருங்கல்பாளையம் பகுதியில் பிரகலாதன் என்பவரை கொலையில் தொடர்புடையவர்கள் ஆவர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக கலைச்செல்வன், குணசேகரன் ஆகிய இருவரும் ஈரோடு நீதிமன்றத்திற்கு சென்றனர். பின்னர் வீரப்பன் சத்திரம் அடுத்துள்ள பெரியகுட்டை வீதி சந்தில் இருவரும் மது அருந்தினர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் கத்தி, அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவரையும் தாக்கிவிட்டு சென்றது.
இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்த கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பருப்பு வகைகளை தவிர்த்துவரும் இந்திய மக்கள்!