ETV Bharat / jagte-raho

நிதி நிறுவனம் நடத்தி ரூ.2.50 கோடி மோசடி: திருச்சியில் தம்பதியர் கைது! - திருச்சி அண்மை செய்திகள்

நிதி நிறுவனம் நடத்தி ரூ.2.50 கோடி மோசடியில் ஈடுபட்டதாக தம்பதியரை திருச்சி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

திருச்சியில் மோசடி தம்பதியர் கைது
திருச்சியில் மோசடி தம்பதியர் கைது
author img

By

Published : Jan 8, 2021, 10:15 PM IST

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவரது மனைவி உமாமகேஸ்வரி (36). இவர்கள் இருவரும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணா சிலை அருகே 'அபெக் கேபிடல் சொல்யூசன்' என்ற நிதி நிறுவனத்தை நடத்திவருகின்றனர்.

இவர்கள் தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், மூன்று மாதத்தில் பல மடங்காகத் திருப்பி தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.

இதனை நம்பி திருச்சி பெரியமிளகுபாறை புதுத்தெருவைச் சேர்ந்த சத்தியசீலன் (32) என்பவர் தானும், தன் நண்பர்கள், உறவினர்களிடமிருந்தும் வசூல்செய்தும் என சுமார் ரூ. 2.50 கோடி முதலீடு செய்துள்ளார்.

அவருக்கு 6 மாத காலமாகியும் உரிய பணப்பலன் திருப்பி தரப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த சத்தியசீலன், இது குறித்து ரமேஷ் - உமாமகேஸ்வரி வீட்டிற்குச் சென்று கேட்டபோது பணத்தைத் தர மறுத்ததோடு ரவுடிகளை வைத்து மிரட்டியுள்ளனர்.

இது குறித்து சத்தியசீலன், திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி ரமேஷ் - உமா மகேஸ்வரி தம்பதியை கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: தாம்பரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை: காவல் துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.