ETV Bharat / jagte-raho

வாடிக்கையாளர் போல் நுழைந்து ஏடிஎம்மில் கொள்ளை: நைஜீரிய இளைஞர்கள் கைது

சென்னை: போரூர் பகுதியில் ஏடிஎம்மில் பணம் நிரப்பவந்த ஊழியரைத் தாக்கிவிட்டு 10 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த, இரண்டு நைஜீரியா நாட்டு இளைஞர்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Nigerian_held_ATM Heist
author img

By

Published : Mar 15, 2019, 6:00 PM IST

வங்கியிலிருந்து பணம் பெற்று ஏடிஎம்களில் நிரப்பும் தனியார் நிறுவனம் ஒன்ற வடபழனியில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்நத தேவராஜ், முரளி ஆகிய ஊழியர்கள், பிப்ரவரி 7ஆம் தேதி, ஒரு வேனில் ரூபாய் 35 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஏடிஎம்களில் நிரப்புவதற்கு சென்றுள்ளனர்.

அதன்படி, அப்பணத்தை வடபழனி விருகம்பாக்கம், வளசரவாக்கம், கம்பாக்கம், வளசரவாக்கம், காட்டுப்பாக்கம் ஆகிய பகுதியில் உள்ள பதிமூன்று ஏடிஎம்களில் நிரப்பிவிட்டு மீதமுள்ள 14 லட்சத்துடன் போரூர் காவல் நிலையம் அருகே உள்ள நூம்பல் மூவேந்தர் நகருக்கு மாலை 6 மணி அளவில் வந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த கனரா வங்கி ஏடிஎமில் 4 லட்சம் ரூபாயை நிரப்பிக் கொண்டிருந்தனர், அப்போது தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க வாடிக்கையாளர் போல் நுழைந்துள்ளார்.

அப்போது, பணத்தை நிரப்பிக் கொண்டிருந்த தேவராஜிடம் மீதமுள்ள பத்து லட்ச ரூபாயைக் கொடுக்கும்படி மிரட்டியுள்ளார். அதற்கு தேவராஜ் பணத்தைத் தர மறுக்கவே, மறைத்து வைத்திருந்த சிறிய கோடாரி மூலம் தேவராஜைத் தாக்கியுள்ளார் அந்த மர்ம நபர். இதில், தேவராஜின் வலது கையில்காயம் ஏற்பட்டுள்ளது.

பிறகு, பணத்துடன் தப்பிக்க முற்பட்ட அந்த மர்ம நபரைத் தடுக்க முயன்ற சக ஊழியர் முரளியையும் அவர் தாக்கியுள்ளார். தொடர்ந்து, 10 லட்சம் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் தயாராய் காத்திருந்த மற்றொரு நபருடன் தப்பிச் சென்றார்.

இது குறித்து போரூர் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போரூர் காவல்துறையினர், இது மதுரவாயில் காவல் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால் மதுரவாயில் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, ஏடிஎம் இயந்திரத்திலிருந்த சிசிடிவி கேமரா மற்றும் அருகே உள்ள கடைகள் கட்டடங்கள் ஆகியவற்றிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், கொள்ளை சம்பவம் நடைபெற்ற அந்த பகுதியில் உள்ள செல்போன் அழைப்புகளை, செல்போன் டவர் மூலமாக ஆய்வு மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக அக்யோமாயோ, ஆமூ என்ற இரண்டு நைஜீரியா நாட்டு வாலிபர்களைக் கைது செய்தனர்.

இவர்களுக்கு உதவியதாகக் கல்லூரி மாணவி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இக்கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட மற்றொரு நைஜீரியா வாலிபர் பெங்களூர் பகுதிகளில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, அவரைத் தேட தனிப்படை காவல்துறையினர் பெங்களூரு மற்றும் மைசூருக்கு விரைந்துள்ளனர்.

Intro:போரூர் காவல் நிலையம் அருகே அர கனரா வங்கி ஏடிஎம்மில் பணம் கொண்டு வந்த பணியாளர்கள தாக்கி 10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவி உள்பட நைஜீரிய நாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது

Body:வங்கியிலிருந்து பணம் பெற்று ஏடிஎம்களில் நிரப்பும் தனியார் நிறுவனம் வடபழனியில் வருகிறது கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் தேவராஜ் முரளி ஆகிய இருவரும் ஒரு வேனில் ரூபாய் 35 லட்சம் எடுத்துக்கொண்டு ஏடிஎம் முன்னெடுப்பதற்காக வந்து கொண்டிருந்தனர் அந்த பணத்தை வடபழனி விருகம்பாக்கம் வளசரவாக்கம் காட்டுப்பாக்கம் ஆகிய பகுதியில் உள்ள பதிமூன்று ஏடிஎம்களில் பணத்தை நிரப்பிவிட்டு மீதம் 14 லட்சத்துடன் போரூர் காவல் நிலையம் அருகே உள்ள நூம்பல் மூவேந் தர் நகருக்கு மாலை 6 மணி அளவில் வந்துள்ளனர் பின்னர் அங்கிருந்த கனரா வங்கி ஏடிஎம்மில் 4 லட்சம் ரூபாயை நிரப்பிக் கொண்டிருந்தனர் அப்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் அந்த ஏடிஎம்கள் பணம் எடுக்க வாடிக்கையாளர் போல நுழைந்துள்ளார் பணத்தை நிரப்பிக் கொண்டு இருந்த ஊழியரிடம் மீதமுள்ள பத்து லட்ச ரூபாயை கொடுக்கும்படி மிரட்டியுள்ளார் ஊழியர் பணத்தை தர மறுக்கவே மறைத்து வைத்திருந்த சிறிய கோடாரி போன்ற ஆயுதத்தால் தேவராஜ வெட்டியுள்ளார் இதில் தேவராஜ் வலது கையில் காயம் ஏற்பட்டது தாக்குதல் நடத்திய வாலிபரை தடுக்க முயன்ற சக பணியாளர் முரளிக்கும் வெட்டியுள்ளார் காயமடைந்ததுடன் அங்கிருந்த 10 லட்சம் ரூபாயை மர்ம நபர் எடுத்துக்கொண்டு தயாராக வைக்கப்பட்டிருந்த பைக்கில் மற்றொரு நபருடன் தப்பி சென்று விட்டார் இதுகுறித்து போரூர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த போரூர் காவல்துறையினர் இது மதுரவாயில் காவல் நிலைக்கு உட்பட்டது என்பதால் மதுரவாயில் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர் இது தொடர்பாக ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் அருகே உள்ள கடைகள் கட்டிடங்கள் ஆகியவற்றில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர் மேலும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற அந்த பகுதியில் உள்ள செல்போன் அழைப்புகளை செல்போன் டவர் மூலமாக ஆய்வுகளை மேற்கொண்டனர்

Conclusion:கைப்பற்றப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக அக்யோமாயோ,ஆமூ என்ற இரண்டு நைஜீரிய நாட்டு வாலிபர்களை கைது செய்தனர் இவர்களுக்கு உதவியதாக கல்லூரி மாணவி ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் இக் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட மற்றொரு நைஜீரிய வாலிபர் பெங்களூர் பகுதிகளில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து அவனை தேடி தனிப்படை போலீசார் பெங்களூரு மற்றும் மைசூருக்கு விரைந்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.