தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு செம்மரக்கட்டைகள் கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 40 அடி நீளம் கொண்ட கண்டெய்னரில் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகே உள்ள சரக்கு பெட்டக முனையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
அந்த கன்டெய்னரில் தேங்காய் மூட்டைகள், துபாய் ஜெபல்அலி துறைமுகத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் சந்தேகத்தின் பேரில் அந்த கண்டெய்னரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அதில், கன்டெய்னரின் முன்பகுதியில் தேங்காய் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த மூடைகளுக்கு நடுவில் செம்மரக்கட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அடுக்கி வைக்கப்பட்ட 16 டன் செம்மரக்கட்டைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட 16 டன் செம்மரக்கட்டைகளின் மதிப்பு 16 கோடி ரூபாய் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்' - முதலமைச்சர் பழனிசாமி