ETV Bharat / jagte-raho

சத்தீஸ்கரில் பழங்குடியின சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு! - காவர்தா

சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த நான்கு பேரை காவலர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Chhattisgarh tribal girl gang-raped Chhattisgarh Kawardha town Superintendent of Police Shalabh Sinha Tribal girl சத்தீஸ்கரில் பழங்குடியின சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு பழங்குடியின சிறுமி பாலியல் வன்புணர்வு காவர்தா சத்தீஸ்கர்

author img

By

Published : Nov 24, 2020, 8:00 AM IST

காவர்தா (சத்தீஸ்கர்): 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த நான்கு பேரை காவலர்கள் தேடிவருகின்றனர். இந்தக் கொடூர சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் கபிர்தாம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கபிர்தாம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதான பழங்குடியின மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நான்கு பேர், சிறுமியிடம் தவறாக நடந்துள்ளனர்.

இந்நிலையில் அவரது ஆண் நண்பரை தாக்கிவிட்டு, சிறுமியை ஒதுக்குப்புறமான இடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது குறித்து அச்சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

வழக்கு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷாலப் சின்ஹா கூறுகையில், “சிறுமி தனது ஆண்நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் நால்வர் அவரிடம் தவறாக நடந்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு குற்றவாளிகள் தப்பித்து ஓடிவிட்டனர்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த கிராம மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் சிலரிடம் விசாரணை நடந்துவருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.

இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட காங்கிரஸ் அரசாங்கம் தவறிவிட்டது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. பாஜக எம்.பி., சந்தோஷ் பாண்டே கூறுகையில், “சத்தீஸ்கர் மாநிலத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது, இதனை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசாங்கம் தவறிவிட்டது” என்றார்.

மேலும், “பழங்குடியின மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் பலர் சம்மந்தப்பட்டுள்ளனர். ஆனால் துரதிருஷ்டவசமாக குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை” என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: ராஜஸ்தான்; பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு தீ வைப்பு, தாய்-மகள் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.