பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது. சீனாவைச் சேர்ந்த பலர் இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஜி ஜின் பிங் நீக்கப்பட்டதாகவும், கடந்த ஒரு வாரமாக அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதுதொடர்பாக சீனாவின் பிரபல யூடியூப் பிரபலமான ஜெனிபர் ஜெங், ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "செப்டம்பர் 22ஆம் தேதி சீன ராணுவப்படைகள் பெய்ஜிங்கை நோக்கி நகர்கின்றன. அதேநேரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, "ஜின்பிங் வீட்டுக்காவலில் உள்ளாரா? ஜின்பிங் அண்மையில் சமர்கண்டில் இருந்தபோது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், அவரை ராணுவ தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியதாகவும், பின்னர் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகவும் வதந்திகள் பரவுகின்றன. இந்த வதந்தியை சரிபார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தைவான் பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்கா, சீனா வெளியுறவுத்துறை அதிகாரிகள் சந்திப்பு