ETV Bharat / international

எவரெஸ்ட் சிகரத்தில் உலகின் மிக உயரமான வானிலை நிலையம் அமைப்பு! - தேசிய புவியியல் கழகம் எவரெஸ்ட் சிகரத்தில் தானியங்கி வானிலை நிலையம் அமைப்பு

தேசிய புவியியல் கழகம் எவரெஸ்ட் சிகரத்தில் தானியங்கி வானிலை நிலையத்தை (Automatic weather station) 8,830 மீட்டர் உயரத்தில் நிறுவியுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தில்
எவரெஸ்ட் சிகரத்தில்
author img

By

Published : May 19, 2022, 10:54 PM IST

காத்மாண்டு: தேசிய புவியியல் கழக வல்லுநர்கள் குழு, பல்வேறு வானிலை நிகழ்வுகளை அளவிடுவதற்காக எவரெஸ்ட் சிகரத்தில் 8,830 மீட்டர் உயரத்தில் தானியங்கி வானிலை நிலையத்தை (உலகின் மிக உயரமான வானிலை நிலையம்) நிறுவியுள்ளதாக நேபாள ஊடகங்கள் இன்று (மே 19) செய்தி வெளியிட்டுள்ளன.

சூரிய சக்தியால் இயங்கும் இந்த வானிலை நிலையத்தின் மூலம் காற்றின் வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் திசை, காற்றழுத்தம், பனியின் மேற்பரப்பு உயரத்தில் உள்வரும், வெளியேறும் கதிர்வீச்சு போன்ற வானிலை நிகழ்வுகள் அளவிடப்பட உள்ளது. அமெரிக்காவின் அப்பலாச்சியன் மாநில பல்கலைக்கழக நிபுணர் குழு விஞ்ஞானி பேக்கர் பெர்ரி தலைமையிலான குழு தானியங்கி வானிலை நிலையத்தை உலகின் மிக உயரமான நிலையத்தை எவரெஸ்ட் சிகரத்தில் அளவிட்டு நிறுவினர்.

நேபாள நீரியல் மற்றும் வானிலைத்துறை, தேசிய புவியியல் கழகத்துடன் நிறுவப்பட்ட ஐந்து தானியங்கி வானிலை நிலையங்களை இயக்குவது, பரிமாரிப்பது, தகவல்கள் பெறுவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. நேபாள நீரியல் மற்றும் வானிலைத்துறை உயர்அலுவலர் கமல் ராம் ஜோஷி கூறுகையில், தேசிய புவியியல் கழகத்திடம் வானிலை தரவுகளை தங்களுக்கு நேரடியாக அனுப்பும் படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

சீனா, எவரெஸ்ட் சிகரத்தின் வடக்குப் பகுதியில் 8,800 மீட்டர் உயரத்தில் தானியங்கி வானிலை கண்காணிப்பு நிலையம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வாட்டிகனில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.