மாஸ்கோ (ரஷ்யா): உக்ரைன் நேட்டோவில் இணைவது ரஷ்யாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என உக்ரைனின் முடிவிற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தனது முடிவில் உக்ரைன் உறுதியாக இருந்ததால், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது. அப்போது உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உதவியதால் ரஷ்யாவின் எண்ணம் எளிதில் ஈடேறவில்லை.
இதனால் ரஷ்யா தனியார் ராணுவம் என தன்னை சொல்லிக் கொள்ளும் கூலிப்படையான வாக்னர் குழுவை போரில் களமிறக்கியது. உக்ரைனில் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியதற்கு வாக்னர் குழுதான் காரணம் என அந்த குழு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ரஷ்யா தங்களுக்கு சரியாக ராணுவ உதவிகளை வழங்கவில்லை என்று கூறியும், தங்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியும் வாக்னர் குழு ரஷ்யாவிற்கு எதிராக திரும்பியது.
இதன் காரணமாக சொந்த நாட்டிற்கு எதிராகத் திரும்பும் வாக்னர் குழுவின் செயல் முதுகில் குத்துவது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். இந்த நிலையில், வாக்னர் குழு ரஷ்யாவின் ராணுவத் தலைமையகமாக கருதப்படும் ரோஸ்டோவை கைப்பற்றியதாக அறிவித்தது. மேலும் மாஸ்கோ ராணுவத் தலைமையை கைப்பற்றப் போவதாகவும், ராணுவத் தலைமையை மாற்றப் போவதாகவும் அறிவித்தது. இதன் மூலம் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராகவும், ராணுவத்திற்கு எதிராகவும் தனது நடவடிக்கையை வாக்னர் குழு தொடங்கியது.
இதனையடுத்து ரஷ்ய அதிபர் புதின் வாக்னர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உஸ்பெஸ்கிஸ்தான், கஜகஸ்தான், பெலாரஸ் ஆகிய நாட்டு அதிபர்களிடம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஸின் உடன் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் ல்காஷென்கோ பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
பதட்டங்களை தனிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதாக பெலாரஸ் அதிபர் தெரிவித்த சிறிது நேரத்திலேயே வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஸின் தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. பெலாரஸ் அதிபர் உடனாட உடன்படிக்கையின் கீழ், வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஸின் மாஸ்கோவை நோக்கிய தனது படைகளின் அணிவகுப்பை நிறுத்த முடிவு செய்தார்.
இதனையடுத்து நாட்டின் ராணுவத் தலைமைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சியில் ஈடுபட்ட குழுவிற்கு தலைமை தாங்கிய வாக்னர் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படும் என்று அதிபர் மாளிகையான கிரம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பிரிகோஸின் பெலாரஸ் செல்வார், மேலும் அவருடன் கிளர்ச்சியில் ஈடுபட்ட போராளிகள் சட்டத்தால் தண்டிக்கப்பட மாட்டார்கள் கிளர்ச்சியில் பங்கேற்காத வாக்னர் போராளிகள் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம் என்று கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி எஸ் பெஸ்கோவ் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.
-
⚡️⚡️⚡️ President of #Belarus #Lukashenko held talks w/ head of PMC Wagner #Prigozhin. Negotiations continued throughout the day.
— Belarus MFA 🇧🇾 (@BelarusMFA) June 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
‼️Y.Prigozhin accepted the proposal of President of 🇧🇾 to stop the movement of armed people of the Wagner company on the territory of #Russia pic.twitter.com/Kpf2SW7RNu
">⚡️⚡️⚡️ President of #Belarus #Lukashenko held talks w/ head of PMC Wagner #Prigozhin. Negotiations continued throughout the day.
— Belarus MFA 🇧🇾 (@BelarusMFA) June 24, 2023
‼️Y.Prigozhin accepted the proposal of President of 🇧🇾 to stop the movement of armed people of the Wagner company on the territory of #Russia pic.twitter.com/Kpf2SW7RNu⚡️⚡️⚡️ President of #Belarus #Lukashenko held talks w/ head of PMC Wagner #Prigozhin. Negotiations continued throughout the day.
— Belarus MFA 🇧🇾 (@BelarusMFA) June 24, 2023
‼️Y.Prigozhin accepted the proposal of President of 🇧🇾 to stop the movement of armed people of the Wagner company on the territory of #Russia pic.twitter.com/Kpf2SW7RNu
இது குறித்து பெலாரஸ் வெளியுறவு அமைச்சகம் நேற்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது. அதில், “இன்று இரவு 9 மணியளவில், அதிபர்கள் மீண்டும் தொலைபேசியில் பேசினார்கள். பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ, வாக்னர் குழுவின் தலைவர் உடனான உடன்படிக்கை குறித்து ரஷ்யாவின் அதிபர் புதினுக்கு தெரிவித்தார்” என பதிவிட்டு உள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய பல வீடியோக்களின்படி, வாக்னரின் கவச வாகனங்கள் தென்மேற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவ் ராணுவ மையத்தில் இருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் செல்லத் தொடங்கியது. பிரிகோஸின் தனது படை எங்கு செல்கிறது என்று குறிப்பிடவில்லை. ஆனாலும், அவர்கள் ரோஸ்டோவில் கைப்பற்றிய பொதுமக்களின் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி விட்டனர்.
இதையும் படிங்க: எகிப்து சென்றார் பிரதமர் மோடி! இந்திய வீரர்களின் கல்லறையில் அஞ்சலி!