டுபெலோ: அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் பிரபல வால்மார்ட் நிறுவனத்தின் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்தபடி 3 மணி நேரம் வானில் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் காரணமாக டுபெலோ போலீசார், வால்மார்ட் வளாகத்தின் ஊழியர்கள், வாடிக்கையாளர்களை அவசர அவசரமாக வெளியேற்றினர்.
அதோடு வால்மார்டை சுற்றி உள்ள குடியிருப்புகளையும் காலி செய்தனர். இதனிடையே அமெரிக்காவின் மிஸிசிப்பி நகரில் இருந்து சிறிய ரக விமானம் திருடப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் போலீசார் 3 மணி நேரமாக பேச்சு வார்த்தை நடத்தி விமானத்தை தரையிறக்க வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். முதல்கட்ட தகவலில் அவர் மிஸிசிப்பியை சேர்ந்த கோரி பேட்டர்சன் (29) என்பதும், 10 ஆண்டுகளாக விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:விநாயகரை வழிபட்ட பாஜக பிரமுகர் ரூபி கானுக்கு நோட்டீஸ்