ETV Bharat / international

தைவான் பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்கா, சீனா வெளியுறவுத்துறை அதிகாரிகள் சந்திப்பு - அமெரிக்கா சீனா உயர்மட்ட ஆலோசனை

தைவான் ஜலசந்தியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இருவரும் சந்தித்து பேசினர்.

Russia
Russia
author img

By

Published : Sep 24, 2022, 3:03 PM IST

நியூயார்க்: தனி நாடாக உருவான தைவானை, சீனா தங்களுடையது என கூறி வருகிறது. தைவானை கைப்பற்ற போர் தொடுக்கப் போவதாகவும் சீனா மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால் தைவானை ஆதரிக்கும் நாடுகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது. சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது.

அண்மைக்காலமாக தைவான் ஜலசந்தி வழியாக சர்வதேச கப்பல்கள் செல்வதை சீனா எதிர்த்து வருகிறது. தைவான் விவகாரத்தில் சீனாவை எதிர்க்கும் அமெரிக்கா, அவ்வப்போது தைவான் ஜலசந்தி வழியாக தனது போர்க்கப்பல்களை இயக்கி சீனாவை எச்சரித்து வருகிறது. மேலும் உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு சீனா மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதையும் அமெரிக்கா எதிர்க்கிறது. இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாக இருநாட்டு அதிபர்களான ஜோ பைடன் மற்றும் ஜி ஜின்பிங் இருவரும் வரும் நவம்பர் மாதம் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று(செப்.23) அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இருவரும் சந்தித்தனர். இதில், தைவான் விவகாரம் தொடர்பாகவும், உக்ரைன் போர் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்ற பதட்டமான காலங்களில் இருநாடுகள் இடையிலான உறவை பொறுப்புடன் கையாள வேண்டும் என்று இருநாட்டு தலைவர்களும் பரஸ்பரம் வலியுறுத்திக் கொண்டதாக தெரிகிறது. தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு தாங்கள் முழு ஒத்துழைப்பை தருவதாகவும், அதேநேரம் தைவானை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை சீனா கைவிட வேண்டும் என்றும் பிளிங்கன் வலியுறுத்தியாக தெரிகிறது.

இதையும் படிங்க: தைவான் பிரச்னைக்கு மத்தியில் சீனா, தென்கொரியா உயர்மட்ட ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.