ETV Bharat / international

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பலர் படுகாயம்

Maine shooting: அமெரிக்காவின் மெயின் மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் உள்ள ஒரு பாரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Oct 26, 2023, 9:13 AM IST

லூயிஸ்டன் (அமெரிக்கா): அமெரிக்காவின் மெயின் மாகாணாத்தில் உள்ள லூயிஸ்டன் நகரத்தில் உள்ள ஒரு பாரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் இறந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.

இதனையடுத்து, நகர வீதிகளில் உள்ள பொதுமக்கள், தொழிலதிபர்கள் அனைவரும் குடியிருப்புக்கு உள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும், இது தொடர்பான விசாரணை குறித்து பொது வெளியில் தற்போதைக்கு தெரிவிக்க இயலாது எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், லூயிஸ்டன் காவல் துறையினர், தங்களது முகநூல் பக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். மேலும், மருத்துவ உதவிகளைத் தவிர, வேறு எதற்காகவும் யாரும் வெளியேற வேண்டாம் எனவும் காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

அதேபோல், சென்ட்ரல் மெயின் மெடிக்கல் சென்டர் தங்ளது இணையதளப் பக்கத்தில், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற உடன் பாதிக்கப்பட்ட நபர்களை தங்களது மருத்துவமனையில் உடனடியாக சேர்த்ததாகவும், ஆனால், அது குறித்து அவசரகால துறைக்கு ஒரு பெண் அழைத்ததாகவும், தற்போது மருத்துவமனை பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், நேற்று இரவு 7 மணி போல் சம்பவம் நடைபெற்ற உடன் கடையில் இருந்த 25 வாடிக்கையாளர்கள் உள்பட பணியாளர்களை உடனடியாக வெளியேற்றி கதவை பூட்டியதாக லெஜண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் பார் அண்ட் கிரில் உரிமையாளர் மெலிண்டா ஸ்மால் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! கண்டம் விட்டு பாயும் ஏவுகணை சோதனை எனத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.