மியான்மர்: கடந்த ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக கட்சி தலைவர் ஆங் சான் சூகியின் அரசை கவிழ்த்துவிட்டு, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
அதிலிருந்து தங்களுக்கு எதிரானவர்களை அடக்குவதற்கு மரண தண்டனையை ராணுவம் ஆயுதமாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மியான்மரில் 7 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்கி கொள்ளை தொடர்பாக, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெண்ணின் கருப்பையில் 2 கிலோ எடையில் நீர்க்கட்டி.. இந்த அறிகுறி இருந்தா உஷாரா இருங்க!