ETV Bharat / international

Twitter: எலான் மஸ்க் அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் - அதிர்ச்சியில் ட்விட்டர் பயனர்கள்! - ட்விட்டர் பயனாளர்கள் அதிர்ச்சி

ட்விட்டரில் சந்தா செலுத்தும் பயனர்கள் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பதிவுகளையும், சந்தா செலுத்தாதவர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும் மட்டுமே படிக்க முடியும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Twitter
எலான்
author img

By

Published : Jul 2, 2023, 12:07 PM IST

சான் பிரான்சிஸ்கோ: டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

முன்னறிவிப்பு இல்லாமல் ட்விட்டரின் தலைமை நிர்வாகிகளை பணிநீக்கம் செய்தார். அதேபோல், ஏராளமான ஊழியர்களையும் கூண்டோடு பணிநீக்கம் செய்தார். அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு என்பதை குறிக்கும் ப்ளூ டிக்கிற்கு சந்தா செலுத்துவதை கட்டாயமாக்கினார். நீண்ட பதிவுகளை வெளியிடுவது உள்ளிட்ட பல வசதிகளை சந்தா செலுத்தும் பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கினார். எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கைகளுக்கு பயனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே கடந்த ஜூன் 30ஆம் தேதி முதல் உலகளவில் ட்விட்டரைப் பயன்படுத்துவதில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. ட்விட்டர் பதிவுகளை பார்க்க முடியவில்லை என பலரும் குற்றம் சாட்டினர். ட்விட்டர் சேவை முடங்கிவிட்டதாகவும் பரவலாக பேசப்பட்டது.

ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக ஆன்லைன் தளங்களில் ஆயிரக்கணக்கானோர் புகார்களும் அளித்தனர். ஆனால், ட்விட்டர் நிறுவனம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுதான் இதற்கு காரணம் என அதன் பிறகுதான் தெரிய வந்தது. இந்த கட்டுப்பாடுகள் தொடர்பாக எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • To address extreme levels of data scraping & system manipulation, we’ve applied the following temporary limits:

    - Verified accounts are limited to reading 6000 posts/day
    - Unverified accounts to 600 posts/day
    - New unverified accounts to 300/day

    — Elon Musk (@elonmusk) July 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன்படி, சந்தா செலுத்திய அதிகாரப்பூர்வ பயனர்கள் (Verified accounts) ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும். சந்தா செலுத்தாமல் நீண்ட நாட்களாக ட்விட்டரை பயன்படுத்துவர்கள், ஒரு நாளைக்கு 600 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும். அதேபோல், புதிதாக ட்விட்டர் கணக்கு தொடங்குபவர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளார்.

ட்விட்டரில் உள்ள மதிப்புமிக்க தரவுகள் வீணாவதை தடுக்கும் முயற்சியாகவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்காலிகமானது என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த நடவடிக்கைக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ட்விட்டருக்கு எதிராக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டும் ட்விட்டர் நிறுவனத்தை கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் செய்தி சட்டம் எதிரொலி - கனடாவில் உள்ள செய்தி இணைப்புகளை நீக்க கூகுள் திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.