ETV Bharat / international

துருக்கியில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு - 4,000 தாண்டிய பலி எண்ணிக்கை!

துருக்கியில் ஏற்பட்ட 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 4,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், அந்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு - 4,000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

author img

By

Published : Feb 7, 2023, 8:35 AM IST

துருக்கி: தெற்கு துருக்கியின் பசாரிக் மாவட்டத்தில் நேற்று (பிப்.6) காலை 7.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நாட்டில் உள்ள காஜியாந்தெப், சான்லியுர்பா, தியார்பகிர், அதானா, அதியமான், மலாத்யா, ஒஸ்மானியே, ஹதாய் மற்றும் கிலிஸ் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.

அதேபோல் எல்பிஸ்டன் மாவட்டத்தில், நேற்று (பிப்.6) மாலை மீண்டும் 7.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 3,741 கட்டடங்கள் இடிந்து, ஆயிரக்கணக்கானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கினர். உடனடியாக மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணியின் இடையே இதுவரை 1,541 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 9,733 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலநடுக்கம் துருக்கி, சிரியாவின் சில நகரங்கள் மட்டுமின்றி, அண்டை நாடுகளான லெபானிலும் உணரப்பட்டது. சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நாட்டின் லட்டகியா, அலெப்போ, ஹமா மற்றும் டார்டஸ் ஆகிய இடங்களில் இருந்த 237 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 639 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் துருக்கியில் ஏற்பட்ட இந்த பேரிடரை ஒட்டி, அந்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வருகிற பிப்ரவரி 13 வரை துருக்கியில் கல்வித்துறை சார்ந்த நிறுவனங்கள் இயங்காது என துருக்கியின் கல்வி அமைச்சர் மஹ்முத் ஓசர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் மறுஅறிவிப்பு வரும் வரை தடை செய்யப்படுவதாக, அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் மெஹ்மெட் கசபோக்லு அறிவித்துள்ளார். நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உதவ இந்தியா சார்பில் 101 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழு துருக்கிக்கு விரைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: துருக்கி, சிரியா நிலநடுக்கங்கள் - 2,000ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.