பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், அதிபர் தேர்தலின் முதல் சுற்று கடந்த 10ஆம் தேதி நடந்தது. இதில், தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரான், மரைன் லு பென், ஜீன் லுக் மெலன்சோன் உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.
பிரான்ஸ் அரசியலமைப்பு விதிகளின்படி, முதல் சுற்றில் தேசியளவில் 50 சதவீத வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படுவர். இல்லையெனில், முதல் 2 இடத்தை பிடித்தவர்களுக்கு இடையே 2ஆவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நடைபெறும். அதன்படி, முதல் சுற்றில் மேக்ரோன் 27.85%, மரைன் லு பென் 23.15% வாக்குகளைப் பெற்றனர்.
இம்மானுவேல் மேக்ரான்: இதனால், நேற்று 2ஆம் கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) நடந்தது. இதில், இமானுவேல் மேக்ரான் வெற்றி பெற்றார். அவருக்கு 58 சதவீத வாக்குகள் கிடைத்தன. மேக்ரானை எதிர்த்துப் போட்டியிட்ட மரைன் லி பென்னுக்கு 42 சதவீத வாக்குகள் கிடைத்தன.
இதையடுத்து மரைன் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், மேக்ரான் இரண்டாவது முறையாக அதிபர் ஆகிறார். விலைவாசி உயர்வு, கோவிட் பரவல், கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி எனத் தொடர்ந்து பின்னடைவை மேக்ரான் சந்தித்து வந்தார். இந்நிலையில் அவர் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து: தீவிர வலதுசாரி ஆதரவாளரான மரைன் லு பென் தோல்வியை தழுவியுள்ளார். மரைன் லு பென் வெற்றி பெற்றிருந்தால் பிரான்சின் முதல் பெண் அதிபர் என வரலாறு எழுதப்பட்டிருக்கும். இதற்கிடையில், மேக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரான்சின் அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள இம்மானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துகள்.
-
Congratulations to my friend @EmmanuelMacron on being re-elected as the President of France! I look forward to continue working together to deepen the India-France Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) April 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to my friend @EmmanuelMacron on being re-elected as the President of France! I look forward to continue working together to deepen the India-France Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) April 25, 2022Congratulations to my friend @EmmanuelMacron on being re-elected as the President of France! I look forward to continue working together to deepen the India-France Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) April 25, 2022
இந்தியா- பிரான்ஸ் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். வெற்றி அறிவிப்புக்கு பின்னர் பேசிய இம்மானுவேல் மேக்ரான், “எனக்கு வாக்களித்தவர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். உங்களின் வாக்குகள் என் பொறுப்பு உணர்வை மேலும் அதிகரிக்கின்றன என்பதை நான் அறிவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : உக்ரைன் விவகாரம்: ஐரோப்பிய தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு