ETV Bharat / international

சர்வதேச அவசர நிலையாக குரங்கம்மை நோய் அறிவிப்பு - monkeypox

உலகம் முழுவதும் பரவிவரும் குரங்கம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

குரங்கம்மை தொற்றை அவசர நிலை பிரகடனமாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்!

author img

By

Published : Jul 23, 2022, 10:13 PM IST

வாஷிங்டன்: கடந்த மே மாதம் வரை உலகில் முழுவதும் 74 நாடுகளில் 16,000-க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆப்பிரிக்காவிலிருந்து பரவிய இந்தத் தொற்று, இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவின் கேரளா மாநிலத்தில் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பு குரங்கம்மை தொற்று, உலகளாவிய அவசர நிலைக்கு வரவில்லை என்று கூறியது. ஆனால், பல்வேறு நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்துவருவதால், நிலைமையை மறு மதிப்பீடு செய்ய இந்த வாரம் மீண்டும் குழு கூடியது.

இதனையடுத்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், ‘குரங்கம்மை தொற்றை உலகளாவிய அவசர நிலையா' அறிவித்துள்ளார். இந்த தொற்று, 1.5 மில்லியன் பேரை பாதிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒவ்வொரு நாட்டு அரசும் இதனை மிகக் கவனமாக கையாள வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி வந்துள்ளது' - ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.